ஜெர்மனி கத்திக்குத்து தாக்குதலுக்கு பொறுப்பேற்ற IS அமைப்பு!

You are currently viewing ஜெர்மனி கத்திக்குத்து தாக்குதலுக்கு பொறுப்பேற்ற IS அமைப்பு!

ஜெர்மனி நாட்டில் சொலிங்ஜென் நகரில் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்து மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

சொலிங்ஜென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சொலிங்ஜென் நகரின் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றபோது இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை கொடூரமாக கொன்றுளளார்.

இந்த தாக்குதலில் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்துத் தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்நதனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து நடத்தி வரும் நிலையில் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடியதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயது நபரைக் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்குப் பழிவாங்க இந்த தாக்குதலை நடந்தியகாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 26 வயது நபருக்கும், ஐ.எஸ். அமைப்புக்கும் இருக்கும் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

165,000 மக்கள் வாழும் சொலிங்ஜென் நகரம் அங்குள்ள மிகப்பெரிய கத்தி தயாரிப்பு தொழிற்சாலைக்கு பெயர் போனது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments