ஜேர்மனிக்கு கடும் மிரட்டல் விடுக்கும் தென் ஆப்பிரிக்க நாடு!

You are currently viewing ஜேர்மனிக்கு கடும் மிரட்டல் விடுக்கும் தென் ஆப்பிரிக்க நாடு!

அரசியல் மோதல் காரணமாக 20,000 யானைகளை ஜேர்மனிக்கு அனுப்பப்போவதாக போட்ஸ்வானா ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார். பெருமைக்காக காட்டு விலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கைகளுக்கு கடுமையான வரம்புகள் இருக்க வேண்டும் என்று ஜேர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் பரிந்துரைத்தது.

ஆனால் இந்த நடவடிக்கையானது போட்ஸ்வானா மக்களை வறுமையில் தள்ளும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி Mokgweetsi Masisi வாதிட்டிருந்தார்.

மேலும், வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளின் விளைவாக யானைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், வேட்டையாடுவதால் மட்டுமே, அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றார்.

இந்த விலங்குகளுடன் ஜேர்மன் மக்கள் வாழ்ந்து பார்த்துவிட்டு, எங்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்றும் ஜனாதிபதி Mokgweetsi Masisi குறிப்பிட்டிருந்தார். உலகில் உள்ள யானைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானா நாட்டில் உள்ளது.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், 130,000 யானைகள் போட்ஸ்வானா நாட்டில் வாழ்கிறது. மேலும், யானைகளால் சொத்துக்களுக்கு சேதம், விளை நிலங்கள் பாதிக்கப்படவும் காரணமாக உள்ளது.

இதனால் அங்கோலா போன்ற நாடுகளுக்கு சுமார் 8,000 யானைகளை போட்ஸ்வானா அன்பளிப்பாக அளித்துள்ளது. அது போன்று, ஜேர்மனிக்கும் யானைகளை அன்பளிப்பாக அளிக்க தாங்கள் தயார் என்றும் இது வெறும் வேடிக்கை அல்ல என்றும் Mokgweetsi Masisi தெரிவித்துள்ளார்.

உண்மையில் பெருமைக்காக யானைகளை வேட்டையாடுவதை 2014ல் போட்ஸ்வானா நிர்வாகம் தடை செய்துள்ளது. ஆனால் உள்ளூர் மக்களின் கட்டாயத்தை கருத்தில் கொண்டு 2019ல் தடையை நீக்கியது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் யானைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் வேட்டைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. யானை தந்தங்களை இறக்குமதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு ஜேர்மனி என்றே கூறப்படுகிறது.

ஆனால் யானை தந்தங்களின் வர்த்தகத்தை அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளது. மார்ச் மாதம் பிரித்தானியாவிலும் பெருமைக்காக யானை வேட்டையில் ஈடுபடுவதை தடை கோரும் பிரேரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த முன்னெடுப்புக்கும் போட்ஸ்வானா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், லண்டனில் யானைகளை களமிறக்க இருப்பதாக மிரட்டலும் விடுக்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply