ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றின் குற்றவாளியே நெடுந்தீவு கொலையாளி!

You are currently viewing ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றின் குற்றவாளியே நெடுந்தீவு கொலையாளி!

 

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றின் குற்றவாளியே நெடுந்தீவு கொலையாளி! 1
நெடுந்தீவு, மாவிலிதுறைக்கு அண்மையில் 5 பேரை வெட்டிக் கொலைலை செய்த பிரதான சூத்திரதாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 51 வயதானவர்.

நெடுந்தீவு மாவிலித்துறைக்கு எதிரில் உள்ள வீட்டில் நேற்று காலையில் 5 சடலங்களும், ஒருவர் குற்றுயிராகவும் மீட்கப்பட்டனர்.

வீட்டு உரிமையாளர் கார்த்திகேசு நாகசுந்தரி (74), நாகநாதி பாலசிங்கம் (75), அவரது மனைவி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (72), வேலாயுதம் பிள்ளை நாகரத்தினம் (76), சுப்ரமணியம் மகாதேவன் (78) ஆகியோரே கொல்லப்பட்டிருந்தனர்.

கொல்லப்பட்ட அனைவரும் நெருங்கிய குடும்ப உறவினர்கள்.

அங்குள்ள சிவன் ஆலயமொான்றின் கும்பாபஷேகத்திற்காக அவர்கள் வந்திருந்தனர். பிருத்தானியாவிலிருந்து வந்து முல்லைத்தீவு பாண்டியன்குளத்தில் தங்கியிருந்தவர், அங்கிருந்த உறவினர்களுடன் நெடுந்தீவுக்கு வந்திருந்தார்.

இந்தக் கொலை தொடர்பில் நடாத்தப்பட்ட விசாரணையில், கொலைச்சந்தேகநபர் நேற்றிரவே புங்குடுதீவில் வைத்து கைது செய்யப்பட்டார். புங்குடுதீவு, 3ம் வட்டாரத்தைச் சுர்ந்த சபாரத்தினம் ரகு என்ற 51 வயதானவரே கைது செய்யப்பட்டார்.

நீண்ட கால பகையை தீர்க்க இந்த கொலையை செய்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொலையின் பின்னர்49 பவுண் தங்கநகைகளையும் அவர் திருடிச் சென்றுள்ளார். நகைகளும் கைப்பற்றப்பட்டன.

கொலைச்சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்படி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அவரது உறவினர்கள்.

அவர்கள் கோயில் திருவிழாவிற்காக நெடுந்தீவில் வந்து தங்கியிருந்ததை அறிந்துள்ளார்.

கொலை நடந்த வீட்டு உரிமையாளர், தனது வீட்டின் அறைகளை வாடகைக்கு வழங்கி வந்தவர். இதை சாதகமாக பயன்படுத்தி, கோயில் திருவிழாவிற்காக வந்ததாக குறிப்பிட்டு, அந்த வீட்டில் 2 நாட்களாக தங்கியிருந்துள்ளார். நீண்ட காலமாகி விட்டதால் தன்னை அந்த முதியவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையென சந்கேநபர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முதியவர்கள் துாக்கத்திலிருந்த போது, கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். வீட்டில் 5 முதியவர்கள் இருந்ததாகவும் அவர்களை வெட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு நாய் குரைத்து சத்தமிட, நாயையும் வெட்டியுள்ளார், நாய் காயத்துடன் தப்பித்துக் கொண்டது.

இந்த சமயத்தில் அந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும் மற்றொரு உறவினர் அங்கு வந்ததாகவும் அவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து வெளியேறி படகில் புங்குடுதீவு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கத்தியை நெடுந்தீவிலுள்ள கிணறொன்றில் போட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் இன்று காலை சான்றுப் பொருட்களை மீடக நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

இதேவேளை பிந்திக்கிடைத்த தகவலின்படி 

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 51 வயது நபரே கைது செய்யப்பட்டார்.என தெரியவந்துள்ளது குற்றவாளி சிறீலங்கா காவற்துறைக்கு கொடுத்த வாக்குமூலத்தில்

 தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

“குறித்த வயோதிபர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள் என நினைத்து, சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்.

நான் நெடுந்தீவு வந்தால் குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன். அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன். அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர்.

அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன். அதனால் நேற்று அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன்.”என்று கைது செய்யப்பட்டவர் சிறீலங்கா காவற்துறைக்கு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றின் குற்றவாளியே நெடுந்தீவு கொலையாளி! 2

பகிர்ந்துகொள்ள

Leave a Reply