ஜேர்மனியில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்!

You are currently viewing ஜேர்மனியில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்!

27.2.2021 யேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்

ஐ.நாடுகள் சபையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான பரிந்துரையினை உறுப்பு நாடுகள் செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து யேர்மனியில் பரவலாக பல மாநிலங்களில் தொடர்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன.’

அந்த வகையில் இன்று 27.2.2021 சனிக்கிழமை யேர்மனியின் முக்கிய நகரமாகிய கால்ஸ்றூக என்னும் நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 300ற்கும் மேற்பட்ட மக்கள் தற்போதுள்ள கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்தபடி சிறிலங்கா அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பி தங்கள் போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜேர்மனியில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்! 1

தமிழினத்திற்காக நீதி கோரிய மக்கள் தங்கள் கோசங்களை எழுப்பியும் யேர்மன் மொழியில் உரைகளை ஆற்றியும் பதாதைகளைத் தாங்கி நின்றும் தங்களுடைய நிலைப்பாட்டினை எடுத்தியம்பினர். அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஒன்றுகூடல் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப்பாடலுடன் இனிதே நிறைவடைந்தது.

ஜேர்மனியில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்! 2
ஜேர்மனியில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்! 3
ஜேர்மனியில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்! 4
பகிர்ந்துகொள்ள