எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 14 வயதுக்குட்பட்ட சிறுமி உட்பட பல பெண் நோயாளர்களை கையடக்கத்தொலைபேசி மூலம் படம்பிடித்தும், வீடியோ எடுத்தும் உள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யபட்டுள்ளார்.
வட மேற்கு ஜேர்மனியில் வசித்துவரும் 43 வயதுடைய ஹனோ என்னும் அறுவை சிகிச்சை நிபுணர் 190 சந்தர்ப்பங்களில் இப்படி பெண்களை படம் பிடித்துள்ளதுடன் பலரை, துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஜேர்மன் செய்தித்தாளான பைல்ட் (BILD) செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த அறுவை சிகிச்சை நபுணரிடமிருந்து சுமார் ஒரு இலட்சம் அளவிலான பெண்களின் புகைப்படங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவர் பல ஆண்டுகாலமாக பெண்களை படம் பிடித்ததாகவும், பலரை துஷ்பிரயோகம் செய்தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நோயாளியான பெண் ஒருவர் குறித்த அறுவை சிகிச்சை நிபுணர் தனது பிரத்தியேக பகுதியை அவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் படம் எடுப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்தே அறுவை சிகிச்சை நிபுணர் கைதுசெய்யப்பட்டள்ளார்.
இருப்பினும், அறுவை சிகிச்சை நிபுணரான ஹனோ, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்நிலையில், ஜேர்மன் சட்டத்தின் படி இவர் மீதான குற்றச்சாட்டுகளால் இவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.