இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை (A/HRC/57/L.1) ஜேவிபி அரசாங்கம் நிராகரித்தது குறித்து சிலர் சங்கடப்படுகின்றார்கள்
திரு அனுர குமார திசாநாயக்க, திரு டில்வின் சில்வா, திரு விமல் ரத்நாயக்க போன்ற ஜேவிபி தலைவர்கள் இனவாதமற்றவர்கள் என நம்பும் இது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்
ஆனால் ஜேவிபி சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்ளும் அமைப்பு என்பதை புரிந்து கொள்ளுபவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை
உண்மையில் ராஜபக்சே குடும்பத்தின் வெற்றியில் சக பிரயாணிகளாக ஜேவிபி இருந்தது
அதே போல ஜேவிபி யுத்த வெற்றி வாதத்திற்கு எதிரானவர்களும் அல்ல
இதனால் தான் முப்படைக்கான சலுகைகளை குறைக்க மாட்டோம் என இப்போதும் ஜேவிபி வெளிப்படையாக பேசுகின்றது
போர்குற்றவாளிகளை தண்டிக்க மாட்டோம் என்கின்றது
நல்லாட்சி காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கைக்கு தாம் வழங்கிய பதிலில் (Appendix 1 B) மாகாண ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை ஜேவிபி சார்பில் அனுர குமார திசாநாயக்க, திரு விமல் ரத்நாயக்க ஆகியோர் எடுத்தனர்
இது தவிர இதே ஜேவிபி திரு சுனில் ஹந்துநெத்தி மூலம் சுனாமி பொது கட்டமைப்பை (P-TOMS) நீதிமன்றில் நீர்த்து போக செய்திருந்தது
இந்த சுனாமி நிர்வாகக் கட்டமைப்பானது எந்தவிதமான அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை.
அத்துடன் அதற்கு உருப்படியான நிர்வாக வலுவும் இருக்கவில்லை.
மிகவும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட ஒரு தற்காலிக ஒழுங்கமைப்பையே ஜேவிபி நிராகரித்ததிருந்தது
பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்கள் கூட University of Edinburgh இல் சமர்ப்பித்த தனது PhD Dissertation இல் தெளிவாக “The party which managed two ideo-political currents of Marxism and Sinhala nationalism most adroitly was the JVP” என பதிவு செய்துள்ளார்
ஆகவே ஜேவிபி தமிழர்களின் பிரச்சனைகளை நேர்மையாக ஒருபோதும் அணுகாது.
இந்த அரசியல் உண்மைகளில் நாங்கள் தெளிவாக இருந்தால் தேவையற்ற ஏமாற்றங்களை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வராது
-இனமொன்றின் குரல்-