ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சுட்டுக்கொலை!

You are currently viewing ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சுட்டுக்கொலை!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை FBI அதிகாரிகள் சோதனையின் போது சுட்டுக் கொன்றுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்த நபரை சோதனையின் போது FBI அதிகாரிகள் புதன்கிழமை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேற்கு மாகாணத்திற்கு வருகை தருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்துள்ளது.

சால்ட் லேக் சிட்டியின் தெற்கில் இருக்கும் ப்ரோவோவில் உள்ள வீட்டில் சோதனை நடத்திய போது சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் கொல்லப்பட்ட நபரின் விவரங்களை வழங்க FBI மறுத்துவிட்டது, அத்துடன் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் யூட்டாவில் உள்ள பெடரல் வழக்கறிஞர் தாக்கல் செய்த புகாரில் கொல்லப்பட்டவரின் பெயர் கிரேக் ராபர்ட்சன் என்று பெயரிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர் தன்னை “மிக தீவிர டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்” என்று சொல்லி கொள்பவர் என தெரியவந்துள்ளது.

இதனாலேயே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் மன்ஹாட்டன் மாகாண வழக்கறிஞர் ஆல்வின் பிராக்கை ஆகியோருக்கு வெளிப்படையான கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட மிரட்டலில், “பைடன் யூட்டாவிற்கு வருவதாக நான் கேள்வி பட்டேன், M24 துப்பாக்கியின் தூசிகளை சுத்தம் செய்ய வேண்டும்” இது அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சரியான நேரம்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் “முதலில் ஜோ பைடன் என்றும், இரண்டாவதாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் என்றும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply