எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளிலும், நாடு முழுவதும், முழு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, வரும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நடைமுறைக்கு வரும் ஊரடங்குச் சட்டம், ஞாயிறு காலை நீக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று முழுநாளும் நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம், எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.
எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம், 3 ஆம் திகதி புதன்கிழமை வரை – வழமை போல, தினமும் இரவு 10 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.
அதன் பின்னர், ஜூன் 4ஆம் திகதியும், 5 ஆம் திகதியும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படாது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.