டக்கிளஸ், கருணா, பிள்ளையானுக்கு மாற்றீடாக வடகிழக்கு என்.பி.பி ஒட்டுக்குழு!!

You are currently viewing டக்கிளஸ், கருணா, பிள்ளையானுக்கு மாற்றீடாக வடகிழக்கு என்.பி.பி ஒட்டுக்குழு!!
டக்கிளஸ், கருணா, பிள்ளையானுக்கு மாற்றீடாக வடகிழக்கு என்.பி.பி ஒட்டுக்குழு உருவாக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் அரசியல் உரிமை கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்து, சிங்கள அரசின் சதிகார நிகழ்ச்சி நிரல்களை தமிழர் தாயகத்தில் தங்குதடையின்றி நிகழ்த்துவதற்கு சிங்களவர்களுக்கு புதிய தமிழ் அரசியல் முகங்கள் தேவைப்படுகிறது.
விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் டக்கிளஸ், கருணா, பிள்ளையான் போன்ற ஆயுதக்கும்பல்களை வைத்து செய்த வேலைகளை, இன்று “சர்வதேச நாணய நிதியம்”, “உலக வங்கி” போன்ற நிறுவனங்களில் முழுமையாக தங்கியிருக்கக் கூடிய நிலையில் செய்ய முடியாது என்பதாலும், தங்களைவிட வேறெந்த ஆயுததாரிகளும் அரசியல் தலைவர்களாக இருக்கக் கூடாது என்று ஜே.வி.பி முடிவெடுத்துள்ளதாலும் டக்கிளஸ், கருணா, பிள்ளையான் போன்ற முகவர்கள் அடியோடு அழிக்கப்படும் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் சிங்கள அரசின் தமிழர்தாயக சிதைப்பிற்கு பிறிதொரு முகம் தேவைப்படுகிறது. இராணுவத்தின் பிரசன்னத்தையும் பௌத்தமயமாக்கலை, சிங்கள குடியேற்றங்களை ஆதரிப்பதற்கு பொதுசன முகம் தேவைப்படுகிறது.
இதற்காக பின்வரும் அடிப்படையில் ஜே.வி.பி என.பி.பிக்கு வடக்கிலிருந்து முகவர்களை தேர்ந்தெடுத்தது:
1) கடந்தகாலங்களில் தீவிரமாக தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபடாதவர்கள்
2) கடந்தகாலங்களில் இராணுவமயமாக்கலை எதிர்க்காதவர்கள்.
3) கடந்தகாலங்களில் சிங்கள பௌத்தமயமாக்கல் குறித்து எந்த அக்கறையோ ஆகக்குறைந்தது தகவல்களோ தெரியாதவர்கள்.
4) பதவி மற்றும் புகழ்ச்சி விரும்பிகள்
5) மண், மது அல்லது மாது இதில் ஏதாவது ஒன்றில் பலவீனமானவர்கள்
சிங்களத்தின் புதிய முகவர்கள் நேரடியாக ஆபத்தற்றவர்கள் என தோற்றமளித்தாலும், அவர்களை மிக நேர்த்தியாக ஜே.வி.பி தெரிவு செய்திருக்கிறது.
மேற்கூறிய 5 விடையங்களில் முதல் 4 விடையங்களும் ஆட்தெரிவிற்கான கட்டாய கருது கோளாக காண்ப்படுகிறது. ஐந்தாவது அவர்களை கட்டுப்படுத்துவற்கான நாண் கயிறு.
இந்த நிலையில் முதல் நான்கு விடையகளிலும் அதிக புள்ளிகள் எடுத்து என்.பி.பி வேட்பாளர்களாக தெரிவானவர்கள் தமது சொந்த இனத்திற்கு எதிராக ஆகக் கூடிய துரோகங்களை செய்யக் கூடியவர்கள். மிக ஆபத்தானவர்கள்.
-ஆதவன் துலா-
பகிர்ந்துகொள்ள

Leave a Reply