சாத்தான் ஆகிய டக்ளஸ் அவர்களே நீங்கள் வேதம் ஓத வேண்டாம்!. ஆடு நனைகிறது என்று ஓநாய் ஆகிய நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் சட்டத்தரணி க.சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் மீது ஈபிடிபி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து இன்று (02) யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இதனை தெரிவித்தார்.
மேலும்,
நீங்கள் செய்தவையை நாம் மறக்க மாட்டோம். எங்களது உறவுகள் காணமல் ஆக்கப்பட்டமைக்கு சித்தாதர்த்தன் எப்படி காரணமோ அவ்வாறு வடக்கில் நீங்கள் காரணம்.
உங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்ட அறுகதை இல்லை. நீதியாக விசாரணை நடத்தினால் குற்றவாளி கூண்டில் முதலில் நிறுத்தப்படுவது யார் என்று உங்களுக்கும் கருணா குழுவுக்கும் கோத்தாபயவுக்கும் போட்டி ஏற்படும்.
உதவி செய்ய விரும்பினால் உங்களினால் கடத்தப்பட்டவர்கள் எங்கே என்று வெளிப்படுத்துங்கள். மக்களின காலடியில் மண்டியிட்டு மன்னிப்பு கோர வேண்டும். இது இறுதி எச்சரிக்கை. – என்றார்.