டார்ஸ் ஏவுகணை கொண்டு தாக்கும் உரிமை உக்ரைனுக்கு உள்ளது: ஜேர்மன் நாடாளுமன்றம் கருத்து!

You are currently viewing டார்ஸ் ஏவுகணை கொண்டு தாக்கும் உரிமை உக்ரைனுக்கு உள்ளது: ஜேர்மன் நாடாளுமன்றம் கருத்து!

டாரஸ் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் பகுதிகளை தாக்குவதற்கான உரிமை உக்ரைனுக்கு உள்ளது என ஜேர்மனியின் பன்டஸ்டாக்(Bundestag) நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு மேற்கத்திய நாடுகளும் தொடர்ந்து ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகள் வழங்கி வருகின்றன.

அதிலும் குறிப்பாக ஜேர்மனி போர் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து உக்ரைனுக்கு ஆதரவாக டாங்கிகள், குறுகிய தூர ஏவுகணைகள், குண்டுகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

ஆனால் போர் தீவிரத்தன்மை கருதி உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய டார்ஸ் ஏவுகணைகளை மட்டும் வழங்க மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் பகுதிகளை தாக்க டாரஸ் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு முழு உரிமை இருப்பதாக ஜேர்மனியின் பன்டஸ்டாக்(Bundestag) நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

இதனை நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் மேரி-ஆக்னஸ் ஸ்ட்ராக்-சிம்மர்மேன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் உக்ரைனுக்கு டார்ஸ் ஏவுகணைகள் பரிமாற்றம் செய்வது குறித்து எந்தவொரு முடிவும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply