டாவோசில் சுவிஸ் – உக்ரைன் ஜனாதிபதிகள் சந்திப்பு!

You are currently viewing டாவோசில் சுவிஸ் – உக்ரைன் ஜனாதிபதிகள் சந்திப்பு!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமில் ஜெலன்ஸ்கியை, சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர் சுட்டர் சந்தித்துப் பேசியுள்ளார்.

டாவோசில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டின் போது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

டாவோஸ் மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஐரோப்பாவைப் பற்றி ஒரு கடுமையான உரையை நிகழ்த்திய பின்னர் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் இப்போது ஆட்சியில் இருப்பதால் ஐரோப்பா முற்றிலும் ஓரங்கட்டப்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தனது உரையில் எச்சரித்தார்.

ஐரோப்பா தன்னை சுதந்திரமாக நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அது முன்னணியில் இல்லாது போனால், உலகம் அது இல்லாமல் முன்னேறும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply