டாவோஸ் மாநாட்டிற்கு வரும் இஸ்ரேலிய ஜனாதிபதியைக் கைது செய்யக் கோரி, சுவிஸ் சட்டமா அதிபரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக், மாநாட்டிற்கு வருகை தரும் போது, அவரைக் கைது செய்து, காசா போரில் இனப்படுகொலையைத் தூண்டியதற்காக வழக்குத் தொடர வேண்டும் என பல குற்றவியல் முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், தற்போது அவற்றை ஆராய்ந்து வருவதாகவும் சட்டமா அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த முறைப்பாடுகளில் ஒன்று ” இனப்படுகொலைக்கு எதிரான சட்ட நடவடிக்கை” என்ற அரசு சாரா அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இஸ்ரேலிய ஜனாதிபதி ஹெர்சாக்கின் இராஜதந்திர விலக்குரிமை குறித்து வெளியுறவு அமைச்சு தெளிவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோவ் காலன்ட் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.