இனப்படுகொலையாளி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பிச்சென்று டுபாய் ஊடாக அங்கிருந்து அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியாவின் வேல்ஸில் இருக்கும் (கலாநிதி பிரபாகரன்) இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை படைத்தரப்பில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தன்னிடம் உள்ள படைகளின் உதவியுடன் நிலைமையை சமாளித்துவிடலாம் என கோட்டாபய ராஜபக்ச எண்ணியிருந்த நிலையில் அது தோல்வியை தழுவியுள்ளது.
இராணுவத்தையே நம்பியிருந்த இனப்படுகொலையாளி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடும் அளவிற்கு படைத்தரப்பு அவரை முற்றாக கைவிட்டமையே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பலத்தின் முன்னாள் முற்றுமுழுதாக தோல்வியை கண்டுள்ள படைத்தரப்பு மக்களுக்கு பயந்து பின்வாங்கியுள்ளதுடன்,மக்களை எதிர்கொள்ள முடியாது ஒதுங்கியுள்ளனர்.
மேலும் அரச நிறுவனங்களின் பொறுப்பை படையினரை நம்பி வழங்கியமையே இனப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.