டென்மார்க் நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வரும் முள்ளிவாய்கால் கவனயீர்ப்பு போராட்டங்களில் இன்று சனிக்கிழமை 14.05.2022 அன்று கேர்னிங் நகரில் இடம்பெற்றது. 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வும் மிக உணர்வுபூர்வமாக மேற் கொள்ளப்பட்டது.

எம் மக்களிற்கு நடந்த இன அழிப்பை டெனிஸ் மற்றும் வேற்றின மக்களிற்கும் வெளிப்படுத்தும் முகமாக இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழினத்திற்கு எதிராக நிகழ்ந்த இனப்படுகொலையின் அவலங்களை, பதாகைகள், விபரண படங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இவ் கவனயீர்ப்பு நிகழ்வுக்கு பழமைவாதி கட்சியை சேர்ந்த கேர்னிங் நகரசபை உறுப்பினர் திரு. Per Ørum அவர்கள் வருகை தந்து வணக்கம் செலுத்தியவுடன், சிறப்புரையும் ஆற்றியிருந்தார்.இவ் கவனயீர்பு நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடந்தேறியது




