டென்மார்க்கின் கொல்பேக் நகரில் புனித எலிசபெத் தேவாலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
இன்றைய (17.05.2023 ) நாளில் 17:30 மணிக்கு டென்மார்க்கில் கொல்பேக் நகரில் உள்ள புனித எலிசபெத் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு வழிபாடும், திருப்பலி நிகழ்வும் அருட்தந்தை மிக்கேல் பியன்கோவ்ஸ்கி அவர்களால் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களால் அகவணக்கம் மலர் வணக்கம் மற்றும் ஈகைச்சுடரேற்றல் மிகவும் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.