டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2025.
டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர் விளையாட்டு துறையினரால் 13 ஆவது தடவையாக 22.02.2025 சனிக்கிழமை அன்று வைல நகரில் சிறப்பாக நடைபெற்றது.
இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி கொண்டு அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டன. நடைபெற்ற போட்டிகளில் இம்முறை 15 அணிகள் பங்கேற்று சிறப்பித்தன.
கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இச் சுழல் கிண்ணத்திற்கான சுற்றுப் போட்டியில், இதுவரை தொடர்ந்து முன்றுமுறை எந்தக் கழகங்களும் வெற்றிபெற்று, சுழல் கிண்ணத்தை தமதாக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அணிகளின் விபரங்கள்:
1. இடம்: Team mix
2. இடம்: Ntsk white
3. இடம்: Randers united
சிறந்த விளையாட்டு வீரர்: Bavisan Babu (Team mix)
5 நபர் பிரிவு:
1. இடம்: Ntsk
சிறந்த விளையாட்டு வீரர்: Stefan Perinpam (Randers united)
C பிரிவு:
1. இடம்: Nanri Vanakkam
2. இடம்: Tvk
3. இடம்: Dantam C1
சிறந்த விளையாட்டு வீரர்: Niroshan Srirangathurai













