கடந்த சனிக்கிழமை 22.04.2023 அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையான தமிழ்த்திறன் போட்டி பரடேசியா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக ஈகச்சுடரேற்றத்தின் பின்னர் இரண்டாம் லெப்டினன் மாலதி மற்றும் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம், மாலதி தமிழ்க் கலைக்கூடப் பாடல் மற்றும் வரவேற்புரை ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. பின்னர் கவிதை, பேச்சு, கட்டுரை, பொது அறிவு போன்ற பன்முகப்பட்ட திறன்களுக்கான போட்டிகள் ஆரம்பமாகின.
தங்கள் பிள்ளைகள் தமிழைக் கற்பதோடு மட்டும் நின்று விடாமல் தமிழ்மொழி சார்ந்த பல துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்ற பெற்றோர்களின் ஆர்வத்தை இந்நிகழ்வின் ஊடாகக் காணக் கூடியதாக இருந்தது. போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலிருந்து, பிள்ளைகள் மேடையேறி பரிசுகள் பெறும் வரையும் பெற்றோர்கள் மிகவும் அக்கறையுடன் ஈடுபட்டார்கள்.
இப்போட்டிகளில் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள். வாழிடமொழியில் மட்டுமல்லாமல் எங்கள் தாய்மொழியிலும் நாம் சிறந்து விளங்குகிறோம் என்பதை இம்மாணவர்கள் இந்நிகழ்வின் மூலம் உறுதிப்படுத்திச் சென்றார்கள். இவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கவிஞர்களாகவோ மேடைப் பேச்சாளர்களாகவோ உருவாகுவதற்கான களமாக இத்தமிழ்த்திறன் போட்டியானது அமைந்தது. பங்குபற்றிய மாணவர்கள் அனைவரும் மதிப்பளிக்கப்பட்டமை பற்றி முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இம்மதிப்பளிப்பின் வாயிலாக போட்டிகளில் பங்குபற்றிய அனைவரும் திறமை மிக்கவர்கள் என்ற கருத்து வெளிப்பட்டது. அத்துடன் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் ஏற்கும் மனநிலையை மாணவர்களின் மனங்களில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது என்பதும் வெளிப்பட்டது. இன்றைய நிகழ்வில் கடந்த ஆண்டில், இணையவழியாக நடாத்தப்பட்ட விவாதக்களச்ச்சுற்றுப் பேச்சுப்போட்டி, மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவமணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்புடத்தக்கது.
மாலதி தமிழ்க் கலைக்கூடத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பும் மாணவர்களை ஊக்குவிக்கும் ஊன்றுகோலாக அமைந்தது எனலாம். நடுவர்களாகக் கடமையாற்றியவர்கள் போட்டிகளில் தாம் எவற்றையெல்லாம் மாணவர்களிடம் கவனித்தோம் என்று விளக்கியதுடன், பெற்றோர் எவற்றில் கவனஞ் செலுத்த வேண்டுமென்பதையும் மிகத் தெளிவாக விளக்கினார்கள். இறுதியில் எமது தாரக மந்திரத்துடன், டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்திய மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டியானது இனிதே நிறைவடைந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள்:
பொதுவறிவுப் போட்டி:
6 வயது 2017
1ம் இடம் – கபிலன் வெங்கடேஷ் Odense
2ம் இடம் – கனிமொழி சுகுணேந்திரன் Horsens
3ம் இடம் – வேந்தன் பாலச்சந்திரன் Grindsted
7 வயது 2016
1ம் இடம் – அபிராம் கல்யாண் Holstebro
2ம் இடம் – நித்தியா துர்க்கா நிரஞ்சன் Horsens,
இனியா ஜெயராகவன் Herning
3ம் இடம் – இலக்கியா சுகுணேந்திரன் Horsens
8 வயது 2015
1ம் இடம் – ஹாசினி கேசவன் Holstebro
2ம் இடம் – ஆர்யன் சாய்ரெங்கா Horsens
3ம் இடம் – டியான் சுதர்சன் Randers
9 வயது 2014
1ம் இடம் – நிலன் ஜனார்த்தனன் Aabenraa
2ம் இடம் – ரம்யா நிகேதன் Horsens
3ம் இடம் – மேசோன் செந்தூரன் Herning
10 வயது 2013
1ம் இடம் – தமிழினி தமிழ்ச்செல்வன் Horsens
2ம் இடம் – அம்றிதா கல்யாண் Holstebro
3ம் இடம் – ஹரி கேசவன் Holstebro
11 வயது 2012
1ம் இடம் – சஞ்சய் சுகுமார் Nyborg
2ம் இடம் – நிவேதன் நிரஞ்சன் Horsens
3ம் இடம் – இசைப்பிரியா ஜெயராகவன் Herning
12 வயது 2011
1ம் இடம் -ரித்திஸ் பாலசுப்ரமணியன் Ikast
2ம் இடம் – முத்துகுரு முத்துச்செல்வம் Ikast
3ம் இடம் – மிருணாளினி தனசேகரன் Ikast
13 வயது 2010
1ம் இடம் – மெலனி ஹென்ஸ்மன் Horsens
2ம் இடம் – விக்ரோறியா ஹென்ஸ்மன் Horsens
3ம் இடம் – பவிதா தயாகரன் Aalborg
14 வயது 2009
1ம் இடம் – சுவேதா சுகுமார் Nyborg
2ம் இடம் – கிருத்திலயா ரவிச்சந்திரன் Horsens
3ம் இடம் – துர்கா கலைநேசன் Vejle,
யதின் ஜெயாநந்தன் Ikast
15 – 16 வயது 2008 – 2007
1ம் இடம் – சக்தீஸ்வர் பிரபாகரன் Randers
2ம் இடம் – சனோஸ் ஜெயாநந்தன் Ikast
3ம் இடம் – அக் ஷனா வாமதேவன் Vejle
17 -18 வயது 2006-2005
1ம் இடம் – அர்ஸ்வியா பிரபாகரன் Fredericia
2ம் இடம் – ஆதித்தன் ஜெயரூபன் Randers
3ம் இடம் – சிபிதா தயாகரன் Aalborg
கவிதைப் போட்டி:
9-12 வயதுவரை
1ம் இடம் – மேகா அயந்தன் Holbæk
2ம் இடம் – தியா யோகசுந்தரம் Vejle
3ம் இடம் – பிரணிஸ்கா கிருபாகரன் Skjern
13-15 வயதுவரை
1ம் இடம் – பிரனித் கிருபாகரன் Skjern
2ம் இடம் – துர்கா கலைநேசன் Vejle
3ம் இடம் – இலதிகா அஐந்தன் Holbæk
16 மேற்பட்டோர்
1ம் இடம் – அர்ஸ்வியா பிரபாகரன் Fredericia
2ம் இடம் – பிரணவி வேலழகன் Vejle
3ம் இடம் – அபிவர்ணி சிவரஞ்சன் Fredericia
பேச்சுப்போட்டி:
6 வயது 2017
1ம் இடம் – வேந்தன் பாலச்சந்திரன் Grindsted
2ம் இடம் – தேன்மொழி கண்ணதாசன் Fredericia,
கபிலன் வெங்கடேஸ் Odense
3ம் இடம் – ஸ்ரீநிகா சரவணன் Ikast
7 வயது 2016
1ம் இடம் – அபிராம் கல்யாண் Holstebro
2ம் இடம் – நித்தியா துர்க்கா நிரஞ்சன் Horsens
3ம் இடம் – இலக்கியா சுகுணேந்திரன் Horsens
8 வயது 2015
1ம் இடம் – ஹாசினி கேசவன் Holstebro
2ம் இடம் – சஞ்யித் றிமோன் Vejle
3ம் இடம் – டுவாரக் ரவிச்சந்திரன் Horsens
9 வயது 2014
1ம் இடம் – சைனா றமேஸ் Skjern
2ம் இடம் – சிரிப்ஷ பிரேம்குமார் Dianalunds
3ம் இடம் – ரம்யா நிகேதன் Horsens
10 வயது 2013
1ம் இடம் – தமிழினி தமிழ்ச்செல்வன் Horsens
2ம் இடம் – மேகா அயந்தன் Holbæk
3ம் இடம் – அம்றிதா கல்யாண் Holstebro
11 வயது 2012
1ம் இடம் – பிரணிஸ்கா கிருபாகரன் Skjern
2ம் இடம் – நிவேதன் நிரஞ்சன் Horsens
3ம் இடம் – கனிஷ காசிராசா Nyborg
12 வயது 2011
1ம் இடம் – திவ்யஸ்ரீ வசந்த் Grindsted
2ம் இடம் – தியா யோகசுந்தரம் Vejle
3ம் இடம் – மிருணாளினி தனசேகரன் Ikast
13 வயது 2010
1ம் இடம் – பிரனித் கிருபாகரன் Skjern,
அஸ்ஜித் தமிழ்ச்செல்வன் Horsens
2ம் இடம் – விக்ரோறியா ஹென்ஸ்மன் Horsens
3ம் இடம் – தாரிகா ஜெயசீலன் Odense
14 வயது 2009
1ம் இடம் – இலதிகா அஐந்தன் Holbæk
2ம் இடம் – கிருத்திலயா ரவிச்சந்திரன் Horsens
15 வயது 2008
1ம் இடம் – சக்திஸ்வர் பிரபாகரன் Randers
16-17 வயது 2007-2006
1ம் இடம் – பிரணவி வேலழகன் Vejle
2ம் இடம் – அக்சயா சோதிநாதன் Fredericia
3ம் இடம் – திபாலன் திருக்கேதீஸ்வரன் Ikast
கட்டுரைப்போட்டி:
10-15 வயது
தர்சன் மணிகண்டன் – Ikast
சுவேதா சுகுமார் – Nyborg
முத்துக்குரு முத்துச்செல்வம் – Ikast
16 வயதிற்கு மேற்பட்டோர்
திபாலன் திருக்கேதீஸ்வரன்