டென்மார்க் தலைநகரில் மாபெரும் முள்ளிவாய்க்கால் பேரணி
இன்று புதன்கிழமை 18.05.2022 அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தின் முன் ஒன்று கூடிய மக்கள் அங்கு கவனயீர்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர், பின்பு அங்கிருந்து Kongens Nytorv சதுக்கத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி பெரும் எழுச்சியுடன்,

பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. இப்பேரணியில் பதாகைகள், தமிழீழத் தேசியக்கொடி மற்றும் இனவழிப்புக்கான நீதி கோரிய உரத்த குரலிலான ஆர்ப்பரிப்புடன் இப்பேரணி Kongens Nytorv க்கு வந்தடைந்தது. அதன்பிறகு அங்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த அனைவருக்குமான சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்த நினைவுத் தூபிக்கு ஈகைச்சுடரேற்றி , அகவணக்கம் மற்றும் பொதுமக்களின் மலர்வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் இப்பேரணியில் பங்குகொண்ட டென்மார்க்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள், குர்திஷ் சங்க உறுப்பினர், இளையோர் மற்றும் செயற்ப்பாட்டாளர்களின் கவிதை மற்றும் எழுச்சியுரைகளும் இடம்பெற்றது.

இறுதியாக தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”என்று கோசம் உரக்க ஒலித்ததுடன், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
நிகழ்வுன் இறுதியில் முள்ளிவாய்க்கால் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி, அனைவருக்கும் பரிமாறப்பட்டது, குறிப்பிடதக்க நிகழ்வாக இடம் பெற்றது.














