மின்ங் என்ற சிறிய விலங்கிலிருந்து கொரோனா கிருமி பரவுகின்றதன் காரணமாக பிருத்தானியா டென்மார்க் நாட்டிற்கான பாதையை இன்று மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நோர்வேயும் டென்மார்க் நாட்டிற்கான பயணப்பாதைகளை மூடலாமென செய்திகள் தெரிவிக்கின்றன
அதேவேளையில் டென்மார்க் 15 மில்லியன் மின்ங் விலங்குகளை கொல்வதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் டென்மார்க் செய்திகள் தெரிவிக்கின்றன
இதேவேளை நோர்வேயில் இப்போது உள்ள விதிமுறைகளின்படி வெளிநாடு செல்லும் அனைவரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் அதேவேளையில் 72 மணத்தியாலங்களுக்கு உட்பட்ட கொரோனா இல்லையென பரிசோதிக்கப்பட்ட சான்றிதழ் காண்பிக்க படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.