டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் வணக்க நிகழ்வும்,
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்.
மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 35ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் டென்மார்க் தமிழீழ மகளிர் அமைப்பினாரால் Nyborg நகரில் 15.10.2022 அன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது.
தமிழீழப் பெண்கள் எழுச்சி நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி 2ம் லெப். மாலதி, லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வீர வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மக்கள் சுடர், மலர்வணக்கம் மாவீரர்களுக்கு செலுத்தியதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது .
மேடை நிகழ்வாக Nyborg நகர மாலதி தமிழ்க் கலைக் கூடத்தினரின் கவிதை, நாடகம், நடனத்தை தொடர்ந்து மாவீரர்களின் வீரத்தை உணர்த்தும் கவிதையுடன் எழுச்சி கானங்களும் இடம் பெற்றன.
நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழர்களின் தாரக மந்திரமான “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற கோசத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

























