ஜப்பான் தலைநகரில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆளுநர், மக்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
டோக்கியோவில் நிலைமை தீவிரமாயுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெடிக்கக்கூடும் என்றும் நான் பலமுறை கூறியுள்ளேன். இப்பொழுது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என்று Yuriko Koike இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை, ஜப்பானில் 277 புதிய பாதிக்கப்பட்டவர்கள் உறுதி செய்யப்பட்டனர். அவர்களில் 97 பேர் டோக்கியோவில் வசிப்பவர்கள். இதுவரை, 3,508 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 84 பேர் தொற்றுநோயால் இறந்துள்ளனர்.