ட்ரம்பின் வரி விதிப்பால் ஒரே நாளில் 208 பில்லியன் டொலர்களை இழந்த உலக பணக்காரர்கள்!

You are currently viewing ட்ரம்பின் வரி விதிப்பால் ஒரே நாளில் 208 பில்லியன் டொலர்களை இழந்த உலக பணக்காரர்கள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.

இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் ட்ரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

அதன்படி, இலங்கை பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்படுமென ட்ரம்ப் அறிவித்தார் அத்தோடு இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி. சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே ட்ரம்ப் அறிவித்தார்.

இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் ட்ரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்நிலையில் ட்ரம்ப்பின் வரிவிதிப்பால் பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பு ஒரே நாளில் வெகுவாக சரிந்துள்ளது.

பில்லியனர்களின் சொத்து மதிப்பை கண்காணிக்கும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒட்டுமொத்த பில்லினர்களின் செல்வத்தில் நேற்று ஒரே நாளில் 208 பில்லியன் டொலர் சரிவு ஏற்பட்டுள்ளது.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இது 13 ஆண்டுகளில் நான்காவது பெரிய ஒரு நாள் சரிவாகும். மேலும் COVID-19 தொற்று காலகட்டத்துக்கு பிறகு இது மிகப்பெரிய சரிவு என்று கூறப்படுகிறது.

பில்லியனர்களில் குறிப்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 17.9 பில்லியன் டொலர்களையும், ஜெஃப் பெசோஸ் 15.9 பில்லியன் டொலர்களையும், எலான் மஸ்க் 11 பில்லியன் டொலர்களையும் இழந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply