ட்ரம்புக்கு பதிலடி உறுதி ஐரோப்பிய ஆணையம் கடும் எச்சரிக்கை !

You are currently viewing ட்ரம்புக்கு பதிலடி உறுதி ஐரோப்பிய ஆணையம் கடும் எச்சரிக்கை !

டொனால்ட் ட்ரம்ப் ஏதேனும் புதிய வரிகளை விதித்தால் ஐரோப்பா பதிலடி கொடுக்கத் தயங்காது என்று ஐரோப்பிய ஆணையமும் ஐரோப்பிய ஒன்றிய தேசியத் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.

அனைத்து நாடுகளையும் பாதிக்கும் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது 25 சதவிகித வரிகளை திங்கட்கிழமை அறிவிப்பதாக கூறியிருந்த ட்ரம்ப் தற்போது அதை உறுதி செய்துள்ளார்.

மேலும், எந்த நாடேனும் பதிலுக்கு அமெரிக்கா மீது வரி விதித்தால், அதற்கான பதிலடி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நலன்களைப் பாதுகாக்க உரிய பதிலளிப்பதாக ஐரோப்பிய ஆணையம் திங்களன்று கூறியது.

ஆனால் இதுவரை ஐரோப்பிய ஒன்றியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் குறித்த எந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஏற்றுமதிகள் மீது வரிகளை விதிப்பதற்கு எந்த நியாயத்தையும் காணவில்லை.

ஐரோப்பிய வணிகங்கள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் செயல்படுவோம் என்றும் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவர் பல நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படு எஃகு மீது 25% வரிகளையும், அலுமினியத்தின் மீது 10% வரிகளையும் விதித்தார்.

அப்போது ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 6.4 பில்லியன் யூரோ அளவு ஏற்றுமதியில் பாதிப்பை அனுபவித்தது. தொடர்ந்து 2.8 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்தது.

தற்போதைய வரி விதிப்பால், கனடாவும் மெக்ஸிகோவும் அதிகமாக பாதிக்கப்படும் என்றே கூறப்படுகிறது. மேலும், ஐரோப்பிய எஃகு ஏற்றுமதியில் சுமார் 25% அமெரிக்காவிற்குச் செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply