தஞ்சையில் புதைக்கப்பட்ட மாவீரர் லெப் போசன் அவர்களின் கல்லறை இடிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு தஞ்சாவூர் வடக்குவாசல் இடுகாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்த மாவீரர் லெப்டினன்ட் போசன் கல்லறை கடந்த 34 ஆண்டுகளாக அமைந்திருந்தது. அக்கல்லறை கடந்த செவ்வாய்க்கிழமை (24.1.2023) இடிக்கப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் போசனின் நினைவு கல்வெட்டில் மறைவு – 27-06-1989 திறப்பாளர் : தமிழினக் காவலர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.பி.எல் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்) நகர திராவிடர் கழகம். தஞ்சாவூர். என்று எழுதப்பட்டிருந்தது.
1989 ஆண்டு காலகட்டத்தில் விழுப்புண் அமைந்த நிலையில் தழிழ்நாட்டு கொண்டுவரப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையில் மோப்பம் பிடித்து போசனை இருக்குமிடமறிந்து அவரை கைது செய்ய ஏற்பாடுகள் நடந்தேறியுள்ளது. இதை அறிந்த லெப்டினன்ட் போசன் அவர்கள் எதிரிகளின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக தன் கழுத்திலேயே சயனைட் குப்பி கடித்து சாவைத் தழுவியுள்ளார் என்பது நினைவூட்டத்தக்கது.
”தமிழீழ விடுதலைப் புலி போசன் நினைவு கல்வெட்டு. மறைவு-27-06-989 திறப்பாளர் : தமிழினக் காவலர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.பி.எல் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்) நகர திராவிடர் கழகம்.தஞ்சாவூர்.” என்று எழுதப்பட்டிருந்த கல்வெட்டு இன்று சுக்குநூறாக உடைத்து தகர்த்துள்ளது தமிழக அரசு! தமிழீழ விடுதலைப் புலிகள் என்றாலே தி.மு.க.விற்கு எப்போதும் வயிற்றிலே புளி கரையும்! இந்த நினைவிட தகர்ப்பு திட்டமிட்ட திமுக அரசின் தமிழினப்பகையின் வெளிப்பாடு!
மாவீரர் போசன் என்பவர் யார்? இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் அரங்கேறும் காலகட்டத்தின் தமது அறச்சீற்றத்தை வெளிக் கொணர்ந்து இந்திய சிங்கள இராணுவத்தினரை நேர்நின்று மோதியவர். அந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தஞ்சமைடைந்து போரில் காயமுற்றிருந்த அவர் தொடர் மருத்துவச் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையில் மோப்பம் பிடித்து போசனை இருக்குமிடமறிந்து தமிழக காவல் துறையின் துணையோடு அவரை கைது செய்ய ஏற்பாடுகள் நடந்தேறியுள்ளது. இதை அறிந்த லெப்டினன்ட் போசன் அவர்கள் எதிரிகளின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக தன் கழுத்திலேயே அணிந்திருந்த சாவுச் குப்பியை (சயனைட் குப்பி) கடித்து சாவைத் தழுவியுள்ளார்.
தஞ்சை வடக்குவாசல் இடுகாட்டில் பலநூறு கல்லறைகளில் இருக்கின்றன. குறிப்பாக திராவிட இயக்கத்தின் முதன்மை தலைவர்களின் ஒருவர் பட்டுக்கோட்டை அழகிரி அவரது கல்லறையும் வடக்கு வாசலில் தான் உள்ளது. ஆனால் திட்டமிட்டே போசன் கல்லறையை மட்டும் இடித்துத்தள்ளுவதற்கான அவசியம் என்ன?
கிட்டத்த 34 ஆண்டுக்கு முன் திராவிட கழகத்தினரால் அக்கல்லறை அங்கே எழுப்பப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இப்படி ஒரு கல்லறை இருக்குமென்று யாவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு கல்லறை இருந்தும் அதை யாரும் தொடர்ந்து போற்றி பாதுகாக்க வில்லை ஆனால் அதை நான் கண்டறிந்து இன்று யாவருக்கும் தெரிந்தவுடன் அதை தரைமாட்டமாக்கியுள்ளது திமுக அரசு. வரலாறு தி.மு.க.வை ஒருபோதும் மன்னிக்காது!
இடிக்கப்பட்ட கல்லறையை அதே இடத்தில் தமிழக அரசு நிறுவவேண்டும்.
இந்த நினைவிடத்தை 34 ஆண்டுகளுக்கு முன் திறந்து வைத்த திராவிடக் கழகத்தலைவர் கி. வீரமணி அய்யா அவர்கள் உடனடியாக தமிழக முதல்வர் அவர்களிடம் முறையிட்டு புதிய கல்லறையை அதே இடத்தில் எழுப்ப ஏற்பாடு செய்யவேண்டும்.
இல்லையெனில் என் தலைமையில் மீண்டும் அதே இடத்தில் போசன் நினைவிடம் நிறுவ பெரும் மக்கள் திரள் போராட்டம் வழியாக அதை செய்வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!
தமிழர் நலப்பேரியக்கத்தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.