தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் பலி!

You are currently viewing தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் பலி!

உழவு இயந்திரத்தினுள் சிக்கி 11 வயது சிறுவன் ஒருவன் உடுவில் கற்பமுனை பகுதியில் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தினை பின் பக்கமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார். இதன்போது, உழவு இயந்திரத்திற்கு பின்னால் இருந்த சிறுவன் உழவு இயந்திரத்தின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் கல்வி கற்கும் நிகால்தாசன் ஆத்வீகன் (வயது 11) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply