துப்பாக்கி முனையில் தான் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், ஸ்ரீலங்கா காவல்துறை, சபாநாயகர் போன்றவர்கள் நடந்துகொண்ட முறை தொடர்பிலும், நாடளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனக்கிருக்கும் சிறப்புரிமையை ஸ்ரீலங்கா காவல்துறை மீறியது தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடந்த விடயங்களை முழுமையாக தெரிவித்துள்ளார்.
சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக, நாடாளுமன்றத்தில் நடந்த கடுமையான வாதப்பிரதிவாதங்களையடுத்து, அவரின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பான விடயத்தை, நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைக்குழு கவனத்திலெடுக்குமென சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.