மனித உரிமைகள் ஆணையகத்தின் 58 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் இன்று (03/03/2025) ஜெனீவா ,ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்) நடைபெறும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்து தமிழர்களும் காலத்தின் தேவை கருதி மீண்டுமொருமுறை ஓயாத அலைகளாக அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க வேண்டும்
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்துவோம்
” காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை ” – தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்