தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் 16 ஆம் திகதி வெளியேற்றப்படுவார்கள்!

  • Post author:
You are currently viewing தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் 16 ஆம் திகதி வெளியேற்றப்படுவார்கள்!

திலயத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வுஹானிலிருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களும் 16 ஆம் திகதி வெளியேற்றப்படுவார்கள் என்று தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதாத் சமரவீர தெரிவித்தார்.

குறித்த 33 மாணவர்களும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கெரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியான சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, இவ்வாறு தியத்தலாவை முகாமில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் தருவாயில் அவர்களின் விடுவிப்ப தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தொற்று நோயியல் நிபுணர் சுதாத் சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன் 33 மாணவர்களும் கொரோனா தொற்றுக்குள்ளானதாக எந்த அறிகுறியும் இல்லை. அவர்கள் ஆரோக்கியமாக செயற்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அங்கொடவில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனை, கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனை, கரட்பிட்டி, றாகமா, குருணாகல், யாழ்ப்பாணம், கம்பாஹா, பதுளை மற்றும் நீர்கொழும்பில் உள்ள பொது வைத்தியசாலைகளில் 15 இலங்கையர்கள் இன்னும் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள