தனியார் வசமான லுஃப்தான்சா நிறுவனம்!

You are currently viewing தனியார் வசமான லுஃப்தான்சா நிறுவனம்!

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது லுஃப்தான்சாவை திவால்நிலையிலிருந்து காப்பாற்ற, ஜேர்மன் அரசாங்கம் 9 பில்லியன் யூரோ கொடுத்து 20 சதவீத பங்குகளை வாங்கியது. இப்போது, அந்தப் பங்குகளை விற்றதால், லுஃப்தான்சா மீண்டும் தனியார் கைகளில் சென்றது. தேசிய மீட்புப் பொதியின் ஒரு பகுதியாக லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் எடுத்த பங்குகளை ஜேர்மன் அரசு இப்போது விற்றுவிட்டதாகவும், இந்த செயல்பாட்டில் ஆரோக்கியமான லாபத்தை பதிவு செய்ததாகவும் லுஃப்தான்சா தெரிவித்துள்ளது.

2020-ல், உலகம் முழுவதும் எல்லைகள் மூடப்பட்டன, எல்லா இடங்களிலும் விமான பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது மற்றும் விமான ஊழியர்களை கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டனர்.

அப்போது லுஃப்தான்சாவை திவால்நிலையிலிருந்து காப்பாற்ற, ஜேர்மன் அரசாங்கம் 9 பில்லியன் யூரோ அரச உதவிப் பொதியின் கீழ் குழுவில் 20-சதவிகிதப் பங்குகளை எடுத்தது.

ஒப்பந்தத்தின் கீழ், அக்டோபர் 2023-க்குள் பங்குகளை விற்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

ஆனால் பயணம் மீண்டும் தொடங்கும் போது விமான நிறுவனத்தின் நிதி நிலைப்படுத்தப்பட்ட நிலையில், பெர்லின் கடந்த ஆண்டு நவம்பரில் அதன் பங்குகளை விற்கத் தொடங்கியது.

மீதமுள்ள 6.2 சதவீத பங்கு மூலதனம் செவ்வாயன்று விற்கப்பட்டதாக லுஃப்தான்சா தெரிவித்துள்ளது.

அரசு பங்குக்கு 306 மில்லியன் யூரோக்களை செலுத்தி 1.07 பில்லியன் யூரோக்களுக்கு விற்றது. இதனால் நிறுவனத்திற்கு 760 மில்லியன் லாபம்.

ஆகஸ்ட் மாதத்தில் Lufthansa, தொற்றுநோய்க்குப் பிறகு அதன் முதல் நிகர லாபத்தைப் பதிவுசெய்தது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply