தமிழீழ தன்னாட்சி உரிமைப் போராட்டத்தில் தமிழர்களால் பேரலையாக அணித்திரண்டு செல்வதை காணமுடிந்தது.
தமிழீழமே ஒரே தீர்வு என்று வலியுறுத்தி பிரித்தானிய மன்னர் மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கில் தமிழர்கள் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன் நடைபெற்றது.
அனைத்துலக ரீதியில் நடத்தப்படும் இப்போராட்டம் அனைத்துலக தொடர்பகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு ஆகிய தமிழ்தேசிய அமைப்புக்கள் இணைந்து நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.