தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாகக் கடல் வழியாக தாயகம் வர முயன்ற நால்வர் இராமேஸ்வரத்தில் கைது!

You are currently viewing தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாகக் கடல் வழியாக தாயகம் வர முயன்ற நால்வர் இராமேஸ்வரத்தில் கைது!

தமிழகத்திலிருந்து  சட்டவிரோதமாகக் கடல் வழியாக தாயகம்  வர முயன்ற நால்வர் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கட்டப்பிராய், கோப்பாய் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சட்டவிரோதமாகக் சென்று முகாம்களில் தங்கியிருந்த நால்வரே இவ்வாறு  நேற்று(10.12.2024) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் 3 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குகின்றனர்.

இந்நிலையில், நால்வரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு திருச்சி சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply