தமிழகத்தில் இரு கடற்றொழிலாளர்கள் கடலில் மூழ்கி பலி !

You are currently viewing தமிழகத்தில் இரு கடற்றொழிலாளர்கள் கடலில் மூழ்கி பலி !

ராமேஸ்வரம் – மண்டபம் மேற்கு வாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிவதற்கு முன்பாகவே முறையான அனுமதி சீட்டு எதுவும் பெறாமல் நேற்று தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சுதர்சன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் ஐந்து கடற்றொழிலாளர்கள் சென்ற நிலையில் படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு சேதம் அடைந்துள்ளது.

இதன்போது படகானது கடலில் மூழ்கிய நிலையில் 3 கடற்றொழிலாளர்கள் அருகில் இருந்த படகொன்றின் மூலம் மீட்கப்பட்டு உயிருடன் கரையை அடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்திய கடலோர காவல்படை, உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply