தமிழகத்தில் மே 27-ஆம் திகதி உறுதி செய்யப்பட்ட 817 தொற்றுகளில், சென்னையில் 558 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. இதில், 5,765 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 93 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6-வது மண்டலமாக அண்ணா நகரிலும் தொற்று எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. ராயபுரம், தண்டையார்பேட்டையில் 24 மணி நேர்த்தில் 100-க்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 107 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 102 பேரும், அண்ணாநகரில் 71 பேரும், தேனாம்பேட்டை 55 பேரும், திரு.வி.க.நகரில் 40 பேரும், கோடம்பாக்கம் 34 பேரும், திருவொற்றியூரில் 25 பேரும், அம்பத்தூரில் 20 பேரும், அடையாறு 19 பேரும், வளசரவாக்கத்தில் 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மாதவரத்தில் 18 பேரும், மணலியில் 12 பேரும், சோழிங்கநல்லூரில் 11 பேரும், பெருங்குடியில் 9 பேரும், ஆலந்தூரில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.