தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கைது!

You are currently viewing தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கைது!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனையின் இறுதியில் அவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பாலாஜியின் சென்னை வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 17 மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையின் இறுதியில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்ல திட்டமிட்டனர்.

அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் நடந்த சோதனையின் இறுதியில் அதிகாரிகள் 3 பைகளில் ஆவணங்களை எடுத்து சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து இருப்பதகாவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் மா.சுப்பிரமணியன் மற்றும் எ.வ.வேலு ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடந்த நீண்ட சோதனைகளுக்கு பிறகு அதிகாரிகள் அவரது வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply