இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் யாழில் காலமானார்.
உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(29.01.2025) இரவு 10. மணிக்கு உயிரிழந்துள்ளார்.
மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் காலமானார்.
இவரது மரணம் தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக தொடர்பு கொண்டபோது அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ள தகவலின்படி,
”முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி காலமானதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான தொடர்புகளுக்கமைவாக இச்செய்தியை வெளியிடுகிறோம். நன்றி’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையில் மூளைக்கு உள்ளே பெரும் கட்டி ஒன்று அவருக்கு வளர்ந்து இருந்தது. அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்ற முடியாத நிலை காணப்பட்டது.
நேற்றைய தினம்(28) அவரை பாராமரித்த மருத்துவர்கள் அவர் இன்னும் 48 மணி நேரமே உயிருடன் இருப்பார் என்று தெரிவித்த நிலையில் இன்று அவர் இறந்து விட்டார்.
தலையில் இருந்த கட்டி வெடித்ததால் மூளை செயல் இழந்து அவர் இறந்து விட்டதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.