ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டொன் டேவிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நேற்றுமுன்தினம் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டில் தமிழர் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகவும், அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
தமிழர்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், உறுதிப்பாட்டையும் உறுதி செய்யுமென அவர் தெரிவித்தார்.