தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மிக கொடூரமான யுத்தக்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியமானது!

You are currently viewing தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மிக கொடூரமான யுத்தக்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியமானது!

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் உங்கள் அரசியல் பயணம் எப்படியாக இருக்க போகிறது எனும் கேள்விக்குதமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பதிலின் சாராம்சம்பதிலின் போது இதனைதொரிவித்துள்ளார் கொழும்பில் உள்ள முதன்மை ஊடகத்தில் நடைபெற்ற நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்.

எமது அரசியல் பாதை நாம் தேர்தலுக்கு முன்பு கூறிவந்ததை மைஅயப்படுத்தியே இருக்கும்.அது மூன்று அம்சங்களை பிரதானமாக கொண்டிருக்கும் 1) இலங்கை என்பது பல தேசங்கள் உள்ள நாடென்பதை அங்கீகரித்தலை நோக்கிய எமது அரசியல் நகர்வுகள் உறுதியுடன் தொடரும்.இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு நாடென்பதை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். இது பல்தேச நாடாக பன்மைத்துவத்தை அங்கீகரிக்கின்ற , இனக்களின் சமத்துவத்தைஅங்கீகரிக்கிற நாடாக கட்டமைப்பு மாற்றம் பெற வேண்டும். 2) இங்கு தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மிக கொடூரமான யுத்தக்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியமானது.அதை தொடர்ந்தும் சர்வதேச அரங்கில் வலியுறுத்துவோம்.தமிழர் பகுதிகளில் ஏறத்தாழ பத்து பொதுமக்களுக்கு ஒரு சிறிலங்கா இராணுவம் வீதம் படைக்குவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த இராணுவம் தமது அடிப்படை உரிமைகளை மறுதலிக்கின்ற ஒரு ஆக்கிரமிப்பு படை 3 ) எமது பிரதேசத்தின் அபிவிருத்தி .ஏறத்தாழ 30 வருட யுத்தத்தாலும் 25 வருடத்துக்கு மேற்பட்ட காலம் தமிழர் தாயகம் மீது சிறிலங்கா அரசினால் விதிக்கப்பட்ட கொடூரமான பொருளாதார தடையினாலும் சிதைக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரம் மீள கட்டமைக்கப்பட வேண்டும்.இதனால தமிழர்களின் விவசாயம் மீன்பிடி உள்ளிட்ட பொருளாதார முனைப்புகள் சிதைவுற்றன. திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்பட்டு 30 வருடங்கள் பின் தங்கியுள்ள தமிழர் தாயக பிரதேச பொருளாதார வளர்ச்சி , ஒரு சிறப்ப்பான கட்டமைப்பு மூலம் விசேடமாக கையாளப்படவேண்டும். மாறாக இப்படியாக சிதைக்கப்பட்ட பொருளாதரத்தை , நாட்டின் ஏனைய பகுதிகளின் பொருளாதார முனைப்புகளோடு போட்டி போடுமாறு நிர்ப்பந்திப்பது, எமது மக்களை மேலும் நலிவடைய செய்யும் .இவற்றை மையப்படுத்தியே எமது அரசியல் பயணம் அமையும்.

பகிர்ந்துகொள்ள