தமிழர் தாயகத்தில் தொடரும் கொரோனா இறப்புக்களும் தொற்றுக்களும்!

You are currently viewing தமிழர் தாயகத்தில் தொடரும் கொரோனா இறப்புக்களும் தொற்றுக்களும்!

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று 06 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 06 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

தரணிக்குளம் , பெரியஉலுக்குளம், பூந்தோட்டம் , புளியங்குளம் , பட்டானிச்சூர் (இரண்டு நபர்கள்) ஆகிய பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கோவிட் தொற்றால் மரணித்தவர்களாவார்கள். இந்நிலையில் மரணித்த 6 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை,வவுனியாவில் மேலும் 96 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுந்தரலிங்கம் மகேஸ்வரி (வயது 76), முருகேசு நமசிவாயம் (வயது 80) ஆகியோர் உயிரிழந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் 99 வயதுடைய மரியதாஸ் அன்னம்மா என்றும் மற்றையவர் 51 வயதுடைய தோமஸ் கொலின்ஸ் ஸ்டீவன் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply