தமிழர் பகுதியில் புனித பூமி என்ற போர்வையில் பிக்குவின் அடாவடி!

You are currently viewing தமிழர் பகுதியில் புனித பூமி என்ற போர்வையில் பிக்குவின் அடாவடி!

திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் cள்ள தனியார் விவசாய காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் தொடர்ந்து அடாவடித்தனம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு சொந்தமான காணிக்குள் விவசாய பெரும்போக நெற் செய்கைக்கான இயந்திரம் மூலமான உழுதல் நடவடிக்கையின் போது காணிக்குள் புகுந்த பௌத்த பிக்கு, அட்டகாசம் ஏற்படுத்தியதாக புல்மோட்டையை சேர்ந்த ஜெ.புஹாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிப்பதாவது “வளத்ணாமலை பகுதியில் காலம் காலமாக எங்கள் விவசாய காணியில் விவசாயம் செய்து வந்தோம்.

தற்போது பௌத்த பிக்கு பெரும்போகச் செய்கைக்காக உழுதலை மேற்கொள்ளும் போது தடுத்து நிறுத்தினார்.

இம்முறை குத்தகைக்கு எனது சிறிய தந்தைக்கு காணியை வழங்கியிருந்தேன். இருந்த போதிலும் பௌத்த பிக்குவின் அட்டகாசம் காரணமாக 119 பொலிஸ் தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்த போது அதனை மீறியும் தடையை ஏற்படுத்தி வருகிறார்.இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது ” என்றார்.

புனித பூமி என்ற போர்வையில் விவசாய காணிகளை தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தம் என பல ஏக்கர்களை அடாத்தாக அபகரிப்புச் செய்யும் அரிசி மலை திரியாய் பௌத்த பிக்குவான பாணமுறே திலகவன்ச தேரர் கடந்த கோத்தாபயவின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினராக செயற்பட்டு வந்தவர் மட்டுமல்லாது வடகிழக்கு பௌத்த சங்கத்தின் தலைவர் எனவும் தெரிய வருகிறது.

இந்நிலையில், அரசாங்கத்தினால் இவருக்கு மெய்ப்பாதுகாவலரும் (MSD) வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சியின் பின் அதிரடியாக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்ட போதும் இவ்வாறு பௌத்த பிக்குவுக்கு மாத்திரம் ஏன் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திரியாய்க் கிராமத்தின் பூர்விக வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான வளத்தாமரை ,ஆதிக்காடு, ஒட்டுப்புல்மோட்டை, நீராவிக்கண்டல் ,வேடன்குளம் என உள்ளடக்கிய வயல் வெளிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வயற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புல்மோட்டை அரிசிமலைப் பிக்குவினால் அடாவடியாக கையகப்படுத்தப்பட்ட 88 ஏக்கர் பொதுமக்களின் உறுதிக் காணியில் விவசாயம் மேற்கொள்ள பாரிய சிரமத்தை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

இக்காணிக்கள் அனைத்துமே உறுதிக்காணிகள் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply