இருநூற்றி அறுபத்தியந்து
மணத்தியாலயங்கள்
சாகும்வரை நீராகாரமின்றி
அறப்போர் தொடுத்த
அகிம்சையின் சக்கரவர்த்தி
புனித இலட்சியமாம்
தமிழீழம் என்ற
இறுதி இலக்கிற்காய்
தன் மூச்சை நிறுத்திக்கொண்டான்!
தன் கோரிக்கைகள்
நிறைவேறும் வரை
யாரும் போராட்டத்தினை
இடை நிறுத்தக்கூடாதென
சத்தியம் வாங்கியவன்
வித்துடலாகி
சந்ததிகளின் வழிகாட்டியாய்
வரலாறாகிப்போனான்!
ஏந்திய ஆயுதமே
எங்கள் உரிமைக்கான
திறவுகோல் என்பதை
தன் மரணத்தினால்
திலீபன்
எழுதிவிட்டுப் போனான்!
மனிதம் இறந்துபோன
அவனியில்
அறத்தின் வழியில்
உரிமைக்காய் பேசும்
மொழியில்
உயிர் இல்லை
என்பதை
உலகத்திற்கு
உணர்த்திவிட்டு
எங்கள்
அறத்தின் பிள்ளை
அகன்றுபோனான்!
ஓவென்று
கதறும்
உறவுகளும்
மக்களும்
போராளிகளும்
மரணத்தை வென்ற
மாவீரனுக்கு
மலர்களால்
வணக்கம் செலுத்தத்
தொடங்கினர்!
விழிகளில் முட்டிய
நீரும்
மொழியால் உரசும்
இசையும்
ஊரேழு மைந்தனின்
தியாகத்தினை
அணைத்தபடி
மண்ணை நனைத்தது!
ஆயுதங்களை
வாங்கிய பாரதம்
பாதுகாப்பை
பொறுப்பேற்ற நேருவின் பேரன்
நேர்மையற்றுப்
போனதால்
ஊரெழுமைந்தன்
உயிர் பிரிந்துபோனான்!
எங்கள்
நெஞ்சமெல்லாம்
விடுதலைத்தீயை
விதைத்துவிட்டுப்
சரித்திரமாகிவிட்டான்!