அடையாள உண்ணாநிலைப்
போராட்டம்
தூக்குக்காவடிப் பவனி
பாக்களின் கண்ணீர்த்துளிகள்
மக்களின் தாங்கோணா
துயரத்தின் கனதி
இவற்றுக்கும் இடையில்
இனத்தின் வேணவாவிற்காய்
எல்லா அசைவுகளும் ஓய்ந்து
உள் மூச்சுமட்டும் இழுத்துக்கொண்டு
பத்துநாட்களாய்
செத்துக்கொண்டிருக்கும்
தியாகச்செம்மலின்
நீராகாரமின்றி நீளும்
உரிமைக்கான போராட்டம்!
ஆனாலும்
இந்தியவல்லாதிக்கத்தின்
அமைதியில்
திலீபனை கொல்ல நினைக்கும் கோரம்
வெளிப்பட்டு நிக்கிறது!
அமைதியை
காந்திவழி போதித்த பெரும்தேசம்
வாய்மூடி மௌனியாய்
இருந்து
தூய்மையான போராட்டத்தினை
புறந்தள்ளியது
உலகத்தமிழ் மக்களை
வேதனையின் உச்சத்திற்கு
தள்ளியது!
இன்று
இரண்டாம் முறையாக
பளைப்பாடசாலை மாணவனாக
திலீபனண்ணாவை
என்னாலும்
பார்க்கமுடிந்தது!
விடலைப் பருவத்தில்
மண்விடுதலை பற்றி
கண் திறக்காக் குழந்தையாக
இருந்தகாலமது!
ஆனால்
திலீபனண்ணாவை கண்ட
கணங்களிலிருந்து
விடுதலைப்பொறி மெல்ல
மாணவர்களுக்குள்ளும்
பற்றத்தொடங்கியது!
காற்றுப் புகுந்து கொள்ள
முடியா இடங்களிலும்
குறைந்துபோகும் பார்த்தீபனின்
மூச்சுக்காற்று பரந்து
வீசத்தொடங்கியது!