தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்!

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்

பிரித்தானியாவில் இருந்து  கடந்த 16.02.2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்தினைக் கடந்து, பெல்சியத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.  இன்று (23/02/2022) Namur, Belgium மாநகரத்தில் இருந்து Bastogne, Belgium மாநகரத்தினை வந்தடைந்தது , இயற்கை சீற்றத்தின் காரணத்தினால் பல வீதிகளில் பயணிக்க முடியாத சூழல் நிலவிய போதும் இப்பயணம் தொடர்ந்தும் இலக்கு நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Bastogne மாநகரத்தின் முதல்வராகவும் சமநேரத்தில்  ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிப்பவருடன் நடந்த கலந்துரையாடலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழர்களின் பூர்வீகமான தமிழீழமே நிரந்தர தீர்வு எனவும் குரல்கொடுக்கும்படி கேட்கப்பட்டது. 

நாளைய தினம் (24/02/2022) Luxembourg நாட்டினை சென்றடைந்து தொடர்ச்சியாக இலக்கு நோக்கி பயணிக்கின்றது. 

“சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுகந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை” 

– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன். 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்! 1
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்! 2
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்! 3
பகிர்ந்துகொள்ள

Leave a Reply