தமிழின அழிப்பிற்கு சிறீலங்காவை சர்வதேச நீதி மன்றில் நிறுத்த ஆதரவு கோருகிறார் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு சிறீலங்காவை சர்வதேச நீதி மன்றில் நிறுத்த ஆதரவு கோருகிறார் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்!
தமிழின அழிப்பிற்கு சிறீலங்காவை சர்வதேச நீதி மன்றில் நிறுத்த ஆதரவு கோருகிறார் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்! 1
Shaun Chen

இனப்படுகொலை குற்றத்திற்காக.இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனேடிய அரசை கோரும் மனுவொன்றை (e-4981) பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஷான் சென் ஆரம்பித்து வைத்துள்ளார்.

https://www.ourcommons.ca/petitions/en/Petition/Details?Petition=e-4981

உங்கள் அடையாளம் வெளியிடப்படாது. இந்த மனு முறையானது, அதிகாரப்பூர்வமானது மற்றும் இலவசமானது. கனேடிய அஞ்சல் குறியீடு மற்றும் மின்னஞ்சல் முகவரி இருந்தால் அனைத்து கனேடியர்களும் இந்த மனுவில் கையொப்பம் இடலாம்.

இந்த மனுவில் நீங்களும் கையொப்பமிட்டு, உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் அண்டை வீட்டாரைத் தொடர்புகொண்டு ஆதரவளிக்குமாறு கேட்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு கையொப்பமும் எமக்கு நீதி பெற உதவும்..
நீங்கள் கையொப்ப மனுவை பூர்த்தி
செய்தபின்னர் நீங்கள்தான் என உறுதிப்படுத்த மீண்டும் உங்களுக்கு
மின் அஞ்சல் வரும்(e mail) அதில் நீங்கள் என்பதை கிளிக் செய்ய உங்கள் கையொப்பம் பூர்த்தியாகும் .

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments