பெளத்த சிங்களப்பேரினவாத சிறீலங்கா அரசின், தமிழ்மக்களிற்கெதிராக, 2009 இல் முள்ளிவாய்க்காலில் அனைத்துலகத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும் இரசாயன ஆயுதங்களாலும் திட்டமிட்டவகையில் மிகவும் கொடூரமாக நபாத்தப்பட்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தி நெதர்லாந்துவாழ் தமிழ்மக்களாலும் தமிழ் அமைப்புக்களாலும், அங்குள்ள பல தொடரூந்து நிலையங்கள், மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களிலும் டச், ஆங்கில மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் தேவாலயங்கள், தமிழ்க்கல்விக்கூடங்களிலும் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களிற்காக நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன











