தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 2ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் -காணொளி.

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 2ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் -காணொளி.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  நேற்று (17.02.2023 )  காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பித்து ,பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர்  ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டதோடு,சம நேரத்தில்  தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி   நெதர்லாந்திலிருந்தும்   மனித நேய ஈருருளிப்பயணம்   ஆரம்பமாகியிருந்தது.

இந்த   மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் டென் ஹாக்  நகரில் அமைந்துள்ள  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்  ( International Criminal Court)    முன்பாக  தொடங்கப்பட்டு   ,றொட்ராம் மாநகரசபையில் நினைவுபெற்று,இன்று  (18.02.2023 ) ரொட்டடாம் நகரிலிருந்து  பிரேடா மாநகரம் நோக்கி நகருகின்றது .

தொடர்ந்து  பெல்சியம் , லக்சம்பேர்க், ஜேர்மனூடாக பிரான்ஸ் சென்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக சுவிஸ் நாட்டிற்குள் சென்று .06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.

ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் அறவழிப்போராட்டக்கார்ர்களை ஒவ்வொரு நாட்டு மக்களும் வரவேற்று, உணர்வெழுச்சியுடன் தங்களது ஆதரவினை வழங்குவதோடு, இப்போராட்டங்களில் இணைந்து கொள்ளுவதும் காலத்தின் கடமையாகும்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

என்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அரசியல் எழுச்சியினை உளமேற்று பயணிப்போம்.

“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள

Leave a Reply