தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி 13 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி 13 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்!

 

மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  பிரான்சு கொல்மர் எனும் இடத்தில் இருந்து  13 வது நாளாக 27/02-2024 இன்று 09:30 மணியளவில் அகவணக்கத்துடன் ஈருருளிப்பயணமானது  ஆரம்பமாகி விக்ரன், சிங்கன்சைன், இலசைக் ஊடாக முலுசை நோக்கி  பயணிக்ககின்றது

எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றனர். எதிர் வரும் திங்கட் கிழமை 04/03/2024 அன்று 14மணிக்கு ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தமிழீழ மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்கும் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கின்றது. எனவே அனைத்து மக்களும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள்.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்”

– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்”

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி 13 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்! 1
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி 13 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்! 2
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி 13 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்! 3
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி 13 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்! 4
பகிர்ந்துகொள்ள

Leave a Reply