ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம் நேற்று காலை (30.08.2024) நெதர்லாந்தில் ஆரம்பமாகியுள்ளது. நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) முன்பாக குறித்த மனிதநேய ஈருருளிப்பயணம் தொடங்கப்பட்டது
காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்