தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணத்தின் 10 ஆம் நாள்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் நெதர்லாந்தில் ஆரம்பமான ஈருருளிப் பயணமானது,எழுச்சியோடு பயணித்து பெல்சியம் நாட்டினை ஊடறுத்து பல சந்திப்புக்களோடு பயணித்து,luxemburg மாநகரம்,வெளிவிவகார அமைச்சில் மனுக்கைளிக்கப்பட்டு,யேர்மனி நாட்டிற்குள் பயணித்தது.தொடர்ந்தும் பல மாநகரங்களைக் கடந்து, நகரபிதாக்களுடன் சந்திப்புக்களையும் மனுக்கையளிப்புக்களையும் மேற்கொண்டு பிரான்சு நாட்டிற்குள் சென்றது.நேற்றைய நாள் பிரான்சுக்குள் பயணித்து கம்சயிம் ,லா வன்சுனு முதல்வர்களிடம் மனுக் கையளிக்கப்பட்டு,தொடர்ந்தும் பயணித்த அறவழிப்போராட்டம் சில்றிக்காம் என்னுமிடத்தில் மாலை நிறைவடைந்தது.இன்று சில்றிக்காம் என்ற இடத்திலிருந்து 9 நாள் அறவழிப் பயணமானது, காலை 9.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, பிரான்சு வாழ்மக்களின் பேராதரவுடன் இளையவர்களும் இணைந்து எழுச்சியுடன் பயணித்துக் கொண்டுருக்கிறது.
தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதியினை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு வேண்டும் என்ற கொட்டொலிகளோடு பயணிக்கும் இவ்வெழுச்சிப் போராட்டத்தில் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வேணவாவினை உரமேற்று மக்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் இணைந்து கொள்ள அழைக்கிறோம்.