ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 03.03.2025 இன்று பி.ப 2:00 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்றது
குறித்த போராட்டத்தில் தமிழீழ விடுதலையின் அடுத்த கட்ட நகர்வு திட்டங்கள் மற்றும் சிங்கள அரசின் உளவியல் யுத்தம் போன்றவை தமிழர்கள் எவ்வாறு எதிர்கொண்டு தமிழீழத் தாயகம் நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும் என்று தமிழ் மக்களுக்கு சூளுரைக்கப்பட்டது.








